
Photo: Twitter/ Philippine Emergency Alert
பிலிப்பைன்ஸில் 85 பேருடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சி -130 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தென்பகுதியில் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் குறித்த விமானம் தரையிறங்கும் போது, அது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது அதில் 85 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில், 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றையவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
விமானத்தில் பயணித்தவர்களில் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுபவர்களும், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் கூட்டுப் படையணியை சேர்ந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.