July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் ஏற்பட்ட பாரிய மண் சரிவில் இருவர் பலி; 20 பேர் மாயம்

மத்திய ஜப்பானில் பலத்த மழை காரணமாக அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன்,20 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (01:30 GMT) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலை உச்சியில் ஏற்பட்ட மண் சரிவு நகர் வழியாக கடல் வரை சென்று பல குடியிருப்புகளை அழிவுக்கு உட்படுத்தியுள்ளது.

 

மண் சரிவில் 100 முதல் 300 வீடுகள் வரை பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள கடலோர காவல் படையினரால் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.

பலர் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ஒரு “பயங்கரமான ஒலி” யுடன் ஏற்பட்ட, மண்சரிவு  அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் செய்தியாளர்களிடம் விபரித்துள்ளனர்.

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைப்படி, குறித்த தினத்தில் 315 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த பலத்த மழையைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.