January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு ஜி ஜிங்பிங் எச்சரிக்கை

சீனாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கு வெளிநாட்டு சக்திகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தின நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை நோக்கியதாகக் காணப்படும் கருத்துக்களில் சீனா புனிதத்தன்மையை அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஹொங்கொங்கில் சீனாவின் ஒடுக்குமுறைகள் தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகம், உளவுத்துறை மற்றும் தொற்று நோய் விடயங்களில் அமெரிக்க- சீன உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தாய்வானுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சீனா அசைக்க முடியாத உறுதிப்பாட்டைப் பேணுவதாகவும் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.