டிக்டொக் நிறுவனம் 2021 முதல் காலாண்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர் டிக்டொக் கணக்குகளை நீக்கியுள்ளது.
உலகின் மிகப் பிரபல்யமான வீடியோ பகிர்வு தளமான டிக்டொக், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கணக்குகள் வைத்திருப்பதையே அனுமதிக்கிறது.
சமூக வழிகாட்டல் அறிக்கைக்கு அமைய, டிக்டொக் தளத்தில் இருந்து சிறுவர் பயனாளர்கள் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
70 மில்லியன் சிறுவர் கணக்குகள் நீக்கப்பட்டமை, டிக்டொக் உலக பயனாளர்களில் 1 வீதத்தை விடவும் குறைவானதே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், சமூக விதிமுறைகளை மீறும் 61 மில்லியனுக்கு அதிகமான வீடியோக்களையும் டிக்டொக் நிறுவனம் நீக்கியுள்ளது.
தமது நிறுவனத்தின் வழிகாட்டல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறிய 11 மில்லியன் கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் டிக்டொக் தெரிவித்துள்ளது.