January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்றம் ஜெகொப் ஸூமாவுக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

ஜெகொப் ஸூமா பொலிஸில் சரணடைய ஐந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்;டிருந்தாலும், குறித்த காலப்பகுதியில் அவர் சரணடையத் தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த போது, ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு வழங்கப்பட்டிருந்த அரசியலமைப்பு நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்துக்கே, இவ்வாறு 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஸூமாவின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது.

தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில், வர்த்தகர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ‘ஆட்சியைக் கைப்பற்றும் சதி’ எனக் குறிப்பிட்டு, விசாரணைகளில் ஆஜராகவும் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஸூமாவின் பதவிக் காலம் முடிந்தவுடன் விசாரணைகள் நடைபெற்று, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.