January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடா, அமெரிக்காவில் அதி உயர் வெப்ப நிலை; பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!

(The Weather Network)

கனடாவின் தெற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 115 டிகிரி பாரன்ஹீட் ( 46.6 டிகிரி செல்சியஸ்) என்ற உயர் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இது கனடாவில் கடந்த 84 ஆண்டுகளில் பதிவான மிக அதிகமான வெப்ப நிலையாகும்.அமெரிக்க பசிபிக் வடமேற்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக உருவாகியுள்ள ‘வெப்ப குவிமாடம்’ கனடாவின் உயர் வெப்பநிலைக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு உட்புறத்தில் அமைந்துள்ள லிட்டன் கிராமத்தில் இந்த மிக அதிகமான வெப்ப நிலை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன், ஓரிகான், இடாஹோ, வயோமிங் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த வாரம் அதிக வெப்ப நிலை நீடிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உயிர் ஆபத்துகளை தவிர்க்க குளிரான இடங்களில் இருக்குபடி, அமெரிக்காவிலும் கனடாவிலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் இதற்கு முன்பு அதி உயர் வெப்பநிலையாக 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) வெப்ப நிலை 1937-ஆம் ஆண்டில் மத்திய மாகாணமான சஸ்காட்செவனில் பதிவாகியுள்ளது.

இந்த உயர் வெப்ப நிலை காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.