உலகின் பெரும் குறியீட்டு நாணயமான (Crypto Currency) பைனேன்ஸ், அதன் பரிமாற்றங்களை பிரிட்டனில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நிதி ஒழுங்குபடுத்தல் ஆணையம் இவ்வாறு தடை விதித்துள்ளது.
Binance.com தொடர்பாக வாடிக்கையாளர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டனின் நிதி ஒழுங்குபடுத்தல் ஆணையம், அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் விளம்பரங்கள் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனின் தடை தாம் வழங்கும் சேவைகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது என்று பைனேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைனேன்ஸின் குறியீட்டு நாணய பரிமாற்றம் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால், பைனேன்ஸ் நாணயங்களை வாங்குவதிலும் விற்பதிலும் பிரிட்டன் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ கரன்சி எனப்படும் குறியீட்டு நாணயங்களுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள ஒழுங்குபடுத்தல் ஆணையகங்களின் அழுத்தம் காரணமாக பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.