February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செவ்வாயில் தரையிறங்கியுள்ள ‘சுரொங்’ ரோவரின் வீடியோக்களை சீனா வெளியிட்டது

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கியுள்ள ‘சுரொங்’ ரோவரின் வீடியோக்களை சீனாவின் விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோக்களில் மே மாதத்தில் சுரொங்’ ரோவர் செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகளும் அடங்குகின்றன.

தரையிறங்கும் போது அதன் பாரசூட் அமைப்பு மற்றும் செவ்வாயின் தரையை தொடும் தருணம் ஆகிய காட்சிகள் அவற்றில் உள்ளன.

மேலும், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் அங்கு தரையில் இயங்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சீனா தனது ‘சுரொங்’ ரோவர் விண்கலத்தை 2021 மே 15 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியது.

சுரொங் ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியா என்கிற இடத்தை இலக்கு வைத்து இறங்கியிருந்தது.

அதன் பின்னர் ரோவரில் இருந்த ‘வயர்லெஸ்’ கெமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அண்மையில் விண்வெளி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது, அதன் வீடியோக்கள் சிலவற்றை விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.