சின்சியாங் மாகாணத்தில் முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்கின்றது என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
அது இனப்படுகொலையில்லை என்றால் அதற்கு சமமான ஏதோவொன்று சின்சியாங்கில் முஸ்லீம்களுக்கு இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாநிலத்தில் மனிதர்களின் தலைமுடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட தலைமுடி தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உய்குர் இனப்பெண்களின் தலைகளை மொட்டையடித்து தலைமுடி தொடர்பான பொருட்களை தயார் செய்து அமெரிக்காவிற்கு அனுப்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய கப்பலொன்றை கடந்த ஜூன் மாதம் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்திருந்ததுடன் அந்த பொருட்கள் மனிதர்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனவும் குறிப்பிட்டிருந்தது.
சீன அரசாங்கம் உய்குர் இனத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராக முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை கண்டித்துவரும் அமெரிக்கா சீன அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும் விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் சீனா முஸ்லீம்களுக்கு எதிராக கட்டாய கருத்தடை கருக்கலைப்பு மற்றும் குடும்பகட்டுப்பாடு போன்றவற்றை முன்னெடுக்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
சின்ஜியாங்கில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஐக்கியநாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.