
உலகின் மிக ஆபத்தான வைரஸாக டெல்டா கொவிட் திரிபு மாறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட பி.1.6117.2 எனும் டெல்டா வைரஸ் திரிபு, உலகின் பிரதான கொரோனா திரிபாக மாறியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
வேகமாகப் பரவும் வீரியத் தன்மை கொண்டுள்ளதால் டெல்டா வைரஸ் திரிபின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஜெனிவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன், ஜெர்மனி ரஷ்யா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைவதில் டெல்டா திரிபு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
பிரிட்டனின் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த இருந்த போதிலும், டெல்டா பரவலைத் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளது.
டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.