கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அங்கு மீண்டும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக 10,010 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தீவிர கிசிச்சை பிரிவில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 55 என தெரிவித்துள்ள இத்தாலியின் சுகாதார அதிகாரிகள், கடந்த 24 மணிநேரத்தில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்ச், ஏப்பிரல் மாதங்களில் நாட்டில் நிலவிய நிலைமையுடன் ஒப்பிடும்போது இது குறைந்த எண்ணிக்கையே என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஸ்பெயினும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் 24 மணிநேரத்தில் 6591 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 570பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.