ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரய்ஸி தெரிவாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு அமைய வாக்கு எண்ணிக்கைகளில் இப்ராஹிம் ரய்ஸி முன்னிலை வகிக்கிறார்.
தீவிர பழமைவாத கருத்துக்களைக் கொண்ட ரய்ஸி, ஈரானின் முன்னணி நீதிபதியாவார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவருக்கு அடுத்ததாக, பெரும் அதிகாரம் படைத்தவராக ஜனாதிபதி கருதப்படுகிறார்.
தீவிரப் போக்குடையவர் எனக் கருதப்படும் இப்ராஹிம் ரய்ஸி, அமெரிக்காவின் பொருளாதார தடைப் பட்டியலிலும் இருக்கிறார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் மீதான மரண தண்டனைகளுடனும் இப்ராஹிம் ரய்ஸி தொடர்புடையவர் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இப்ராஹிம் ரய்ஸியே ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பார்க்கின்ற போது தெளிவாகிறது.