photo: Twitter/ Botswana Government
உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிகக் பெரிய வைரக் கல் என நம்பப்படும் வைரக் கல்லொன்று போட்ஸ்வானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
போட்ஸ்வானாவின் வைரக் கல் அகழ்வு நிறுவனமொன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தக் கல்லை கண்டெடுத்துள்ளது.
1098 கரட் அலகு எடை கொண்ட வைரக் கல்லை போட்ஸ்வானா ஜனாதிபதி மொக்வீட்சி மசிசியும் பார்வையிட்டுள்ளார்.
இந்த வைரக் கல், போட்ஸ்வானாவில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய வைரக் கல்லைவிட சிறியதாகும்.
ஆபிரிக்காவின் முன்னணி வைரக் கல் அகழ்விடமாக போட்ஸ்வானா கருதப்படுகிறது.
தமது ஆரம்ப மதிப்பாய்வுகளுக்கு அமைய இந்த வைரக் கல்லை உலகின் மூன்றாவது மிகப் பெரிய வைரக் கல்லாக கருத முடியும் என்று வைரக் கல் அகழ்வு நிறுவனத்தின் பதில் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
3106 கரட் அலகு எடையுடன் 1905 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரக் கல்லே, உலகின் மிகப் பெரிய வைரக் கல்லாக கருதப்படுகிறது.