January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் ‘ஷென்ஸோவ்- 12’ புதிய விண்வெளி நிலையத்துக்கு பணிக்குழு பயணமானது

சீனாவின் ‘ஷென்ஸோவ்- 12’ புதிய விண்வெளி நிலையத்துக்கான பணிக்குழு, அதன் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

புதிய விண்வெளி நிலையத்தின் பணிகளை முன்னெடுக்க மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய பணிக்குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது.

நீய் ஹய்ஷேங், லியு போமிங் மற்றும் டேங் ஹொங்போ ஆகிய விண்வெளி வீரர்கள் ‘ஷென்ஸோவ்- 12’ விண்வெளி நிலையத்தில் மூன்று மாதம் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

புதிய விண்வெளி நிலையம், புவியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இது சீனாவின் பணிக்குழுவொன்று மூன்று மாதங்கள் வரையான நீண்ட கால விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகும்.

புதிய பணிக்குழு சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 2எப் ரொக்கட் மூலம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.