அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
வர்த்தக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இருவரும் ஜெனிவா சென்றுள்ளனர்.
பைடன் மற்றம் புடின் 2018 ஆம் ஆண்டின் பின்னர் சந்திக்கும் முதல் தடவை இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவு வீழ்ச்சியடைந்துள்ள ஒரு கட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னர் ‘தகுதியான விரோதி’ என ரஷ்யாவை அமெரிக்க ஜனாதிபதியும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ‘அண்மைய காலகட்டத்தில் மிக வீழ்ச்சியடைந்துள்ளது’ என புடினும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.