பலஸ்தீனின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இராணுவ இலக்குகள் மீது தாம் விமானத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா நகரில் புதன்கிழமை அதிகாலை முதல் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலஸ்தீனில் இருந்து இஸ்ரேலுக்குள் தீப்பற்றும் பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதற்குப் பதிலடி வழங்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இருந்து தீப்பற்றும் பல பலூன்களும் அனுப்பப்பட்டதால், பல்வேறு தீ விபத்துகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 11 நாட்கள் நீடித்த யுத்த நிலை முடிவடைந்து, ஒரு மாதம் கடக்க முன்னரே மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு, உரிமைகளை வென்றெடுக்க துணிச்சலுடன் போராடுவார்கள் என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.