அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் முகக் கவசம் தொடர்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்பர் மார்கட் பணியாளர், வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுப்பர் மார்கட்டின் காசாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் வைத்திருந்த கைத் துப்பாக்கி மூலம் காசாளர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்ஜியா மாநில துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் காசாளர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்ஜியா மாநில கொரோனா தடுப்பு சட்டத்துக்கு அமைய, வியாபார நிலையங்களில் வாடிக்கையாளர்களை முகக் கவசம் அணியுமாறு பணிக்கலாம்.