மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உட்பட்ட ஜனாதிபதி ஆங் சான் சூ சி மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சட்ட விரோத தொடர்பாடல் உபகரணங்களை வைத்திருந்ததாகவும், கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களை மீறியதாகவும் மியன்மார் இராணுவம் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
குறித்த வழக்கில் ஆங் சான் சூ சி மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெறவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூ சி மீதான வழக்கு விசாரணைகளைக் கண்டித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள், எதிர்கால தேர்தல்களில் சூ சி போட்டியிடுவதைத் தடுப்பதற்கான முயற்சியே இது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
75 வயதுடைய சூ சி பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக மாத்திரமே வீட்டில் இருந்து வெளிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சூ சி தடுத்து வைக்கப்பட்டது முதல் அவரது சட்டத்தரணிகளைச் சந்திக்க இரண்டு சந்தர்ப்பங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
ஆங் சான் சூ சி மீதான தேசத் தூரோக குற்றச்சாட்டு வழக்கொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.