
மியன்மாரின் மென்டலே நகர இராணுவ விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியன்மாரின் தலைநகரில் இருந்து பைன் ஓ எல்வின் நகருக்குச் சென்ற இராணுவ விமானமே, இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் 6 இராணுவத்தினரும் 6 பௌத்த தேரர்களும் உயிரிழந்துள்ளனர்.
பைன் ஓ எல்வின் நகரில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் நடைபெறும் விழாவில் பங்கேற்கச் சென்றவர்களே, விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து தரையிறக்க முற்பட்ட போது, 300 மீட்டர் உயரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானி மற்றும் இன்னொரு பயணி உயிர் தப்பியதாகவும், அவர்கள் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.