உலகின் செல்வந்த நாடுகள் தமது கொவிட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் பைசர் தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளது.
உலக நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகின் குறைந்த வருமானம்கொண்ட 92 நாடுகளுக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கு தாம் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.
இன்று பிரிட்டனில் நடைபெறும் குழு 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பைடன் இதுதொடர்பாக அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோவெக்ஸ் உலக தடுப்பூசி கூட்டணியின் ஊடாக இவ்வருடம் 200 மில்லியன் டோஸ்களையும் 2022 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ்களையும் வழங்கவுள்ளதாக பைடன் அறிவிக்கவுள்ளார்.