அமெரிக்காவில் டிக்டொக் சீனாவின் காணொளி பகிர்வு செயலியான டிக்-டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலி வீ சாட் ஆகியவற்றுக்கான தடையை நிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் ‘டிக்-டாக்’ மற்றும் ‘வீ சாட்’ ஆகிய செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்தது.
இந்தத் தடை தொடர்ச்சியான சட்ட சவால்களை எதிர்கொண்டதோடு, வெளிநாட்டு நிறுவனங்களின் செயலிகளை அமெரிக்க வர்த்தகத் துறை மதிப்பாய்வு செய்து வந்தது.
இந்நிலையில், குறித்த செயலிகள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பதை அறிய “ஆதார அடிப்படையிலான அணுகு முறையை” பயன்படுத்த வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
—