ஐநா பொதுச் சபை 76 ஆவது அமர்வின் தலைவராக மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா பொதுச் சபையின் தலைவராகுவதற்கு 97 வாக்குகள் பெற வேண்டிய நிலையில், 143 வாக்குகளுடன் அப்துல்லா ஷாஹிட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐநா பொதுச் சபை தலைவரின் பதவிக் காலம் ஒரு வருடமாகும்.
மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ஐநா பொதுச் சபை 76 ஆவது அமர்வின் தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கியுள்ளது.
ஐநா பொதுச் சபை 76 ஆவது அமர்வின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை மாலைதீவுக்கு பெரும் மரியாதையாகும் என்று அப்துல்லா ஷாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பொதுச் சபையின் 76 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.