பிரிட்டனின் லீசெஸ்டர்ஷைரில் இரண்டு பாடசாலை மாணவிகளைக் கொலை செய்த கோலின் பிச்போர்க் என்ற குற்றவாளியை பிணையில் விடுதலை செய்ய முடியும் என்று பிணை வாரியம் அறிவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டில் 15 வயதுடைய பாடசாலை சிறுமிகள் இருவரை கற்பழித்து, கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோலின் பிச்போர்க் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயள் தண்டனை விதிப்பட்டுள்ள கோலின் பிச்போர்க், 33 வருடங்களை சிறையில் கடத்தியுள்ளார்.
கோலின் பிச்போர்கின் குற்றம், உலகில் டிஎன்ஏ ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்ட முதலாவது குற்றச் செயலாகும்.
61 வயதுடைய கோலின் பிச்போர்கின் பிணை மனு கடந்த 2018 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பிணை வழங்க முடியும் என்று பிணை வாரியம் அறிவித்துள்ளது.
குற்றவாளி கோலின் பிணையில் விடுதலை செய்யப்படுவது திருப்தியளிப்பதாகவும், நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்க முடியும் என்றும் லீசெஸ்டர்ஷைர் பிணை வாரியம் குறிப்பிட்டுள்ளது.
பிணை மதிப்பாய்வுகள் பூரணமாகவும், தீவிர அக்கறையுடனும் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கே முதலிடம் என்றும் பிணை வாரியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், 30 வருடங்கள் கடந்திருந்தாலும், ஒருபோதும் மறந்துவிட முடியுமான குற்றமல்ல என்று தெற்கு லீசெஸ்டர்ஷைர் பாராளுமன்ற உறுப்பினர் அல்பேர்டோ கொஸ்டா தெரிவித்துள்ளார்.
‘இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த, ஒரு கொலைகாரனை விடுவிப்பது ஒழுக்கக்கேடானது, தவறானது மற்றும் ஆபத்தானது’ என்றும் அல்பேர்டோ கொஸ்டா சுட்டிக்காட்டியுள்ளார்.