May 23, 2025 12:21:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரி, மேகன் தம்பதியினரின் பெண் குழந்தை பிறந்த அறிவிப்புக்கு மகாராணி வாழ்த்து!

file photo: Twitter/ The Prince of Wales and The Duchess of Cornwall

பிரிட்டனின் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததையிட்டு, மகாராணி மகிழ்ச்சியடைவதாக அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

ஹரி, மேகன் தம்பதியினருக்கு வெள்ளிக்கிழமை இரண்டாம் குழந்தையாக, பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு லிலிபெட் டயனா என பெயரிடப்பட்டுள்ளது.

‘லிலிபெட்’ அல்லது ‘லிலி’ என்பது மகாராணியின் சிறு பராய செல்லப் பெயர்களில் ஒன்றாகும்.

அத்தோடு, லிலிபெட் டயனா, பிரிட்டிஷ் மகாராணியின் 11 ஆவது கொள்ளுப் பேத்தியாகும்.

பிரிட்டனின் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததையிட்டு தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.