January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொகோ ஹராம் தலைவர் அபூபக்கர் மரணித்ததாக நைஜீரிய ஆயுதக் குழு அறிவிப்பு!

file photo: wikipedia

நைஜீரிய பொகோ ஹராம் ஆயுதத் குழுவின் தலைவர் அபூபக்கர் ஷெகாவ் மரணித்ததாக, இன்னொரு ஆயுதக் குழு அறிவித்துள்ளது.

நைஜீரிய இஸ்லாமிய ஆயுதக் குழுவொன்று வெளியிட்டுள்ள ஒலிப் பதிவில், ‘அபூபக்கர் ஷெகாவ் தன்மைத் தானே கொலை செய்துகொண்டுள்ளதாக’ தெரிவித்துள்ளது.

பொகோ ஹராம் தலைவர் அபூபக்கர், இரு ஆயுதக் குழுக்களிடையே இடம்பெற்ற போரின் போது, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, உயிரிழந்துள்ளதாகவும் மேற்கு ஆபிரிக்க இஸ்லாமிய அரசு எனும் ஆயுதக் குழு ஊடகங்களுக்கு வழங்கியுள்ள ஒலிப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபூபக்கர் ஷெகாவ் கடந்த மாதம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்ததோடு, இதற்கு முன்னரும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நைஜீரிய அரசாங்கமோ, பொகோ ஹராம் அமைப்போ இதுவரையில் அபூபக்கரின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.