இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது நலன்புரி திட்டங்களுக்கு அரசாங்கம் இதுவரை ரூ .286 பில்லியனை செலவிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதை அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது தொடக்கம் முதல் கட்டமாக நாட்டில் அமுல் படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் போது குடும்பங்களுக்கு 5000 ரூபா பணம் வழங்குவதற்காக 80 பில்லியன் ரூபாவும் புத்தாண்டு காலப்பகுதியில் மேலும் 15 பில்லியன் ரூபாவும் தற்போது 35 பில்லியன் ரூபாவும் மக்களின் நலன்புரி திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி திட்டம் மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்பாடுகளை செயற்படுத்துவதற்காக மிகுதிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.