January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இரண்டு வருடங்களுக்கு முடக்கம்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற வளாக வன்முறைகளைத் தூண்டும் விதமான பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் டொனால்ட் ட்ரம்பின் இரண்டு கணக்குகளும் காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டன.

ட்ரம்பின் பதிவுகள் தமது கட்டுப்பாடுகளை கடுமையாக மீறுவதாக அமைந்திருந்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தடை, தனக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களை அவமதிப்பதாகும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் கட்டுப்பாடுகளை மீறி, உள்ளடக்கங்களைப் பகிர்வதை முடிவுக்குக் கொண்டு வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் மீதான இரண்டு வருட தடை, ஆரம்பமாக தடை விதிக்கப்பட்ட 2021 ஜனவரி 7 ஆம் திகதி முதல் அமுலாகுவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.