நைஜீரியாவில் டுவிட்டர் செயற்பாடுகளை காலவரையறை இன்றி இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்தே, நைஜீரியாவில் டுவிட்டரை இடைநிறுத்துவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிராந்திய பிரிவினைவாதிகளை எச்சரிப்பதாக அமைந்திருந்த நைஜீரிய ஜனாதிபதியின் பதிவை நீக்குவதற்கு டுவிட்டர் நடவடிக்கை எடுத்துள்ளது.
நைஜீரிய அரசாங்கத்தின் அறிவிப்பு ‘கடுமையான கவலை தருவதாக’ டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுவிட்டரின் தரக் கட்டுப்பாடுகளை மீறுவதாக அமைந்த பதிவே, நீக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.