July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெதன்யாஹுவின் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் கூட்டு அரசாங்கத்தை நிறுவ இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் இணக்கம்

photo: Twitter/ Gil Hoffman

இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

இந்த இணக்கப்பாடு, இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவின் 12 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வதாக அமைந்துள்ளது.

எட்டு பிரிவுகளை ஒன்றிணைக்கும் புதிய கூட்டணி அமைக்கப்பட்டதாக மத்திய யேஷ் ஆதிட் கட்சியின் தலைவர் யெய்ர் லாபிட் அறிவித்துள்ளார்.

வலதுசாரி யமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் மற்றும் மத்திய யேஷ் ஆதிட் கட்சியின் தலைவர் யெய்ர் லாபிட் ஆகியோர் சுழற்சி முறையில் பிரதமராகச் செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளன.

புதிய கூட்டு அரசாங்கம் பதவியேற்பதற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டியுள்ளது.

புதிய அரசாங்கம் தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத இஸ்ரேலிய மக்களின் நன்மைக்காக செயற்படும் என்று மத்திய யேஷ் ஆதிட் கட்சியின் தலைவர் யெய்ர் லாபிட், ஜனாதிபதி ரெவ்வன் ரிவ்லினுக்கு அறிவித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்றத்தைக் கூட்டி, புதிய அரசாங்கத்தின் பலத்தை நிரூபிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரெவ்வன் ரிவ்லின் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை 61 வாக்குகளைப் பெறவேண்டியுள்ளது.