January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பறவைக் காய்ச்சல்; எச்10என்3 வைரஸ் தொற்றிய முதல் நபர் சீனாவில் அடையாளம் காணப்பட்டார்

சீனாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், நோய்த் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் 41 வயதுடைய ஒருவரே எச்10என்3 வகை பறவைக் காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எவ்வாறு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல்களை சீனா வெளியிடவில்லை.

மேலும், இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு தொற்ற வாய்ப்பு இல்லை என்றும் சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1 மாதத்தின் பின்னரே, உருமாறிய எச்10என்3 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகிச்சைகள் நிறைவடைந்து, வீடு திரும்பும் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் பீஜிங் தேசிய சுகாதார ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் வேறு எங்கும் எச்10என்3 வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் பீஜிங் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது.