February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சினோவாக்’ தடுப்­பூசி; அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!

சீனாவின் சினோவாக்-கொரோனாவாக் கொவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம்   செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பெற்ற கொரோனா தடுப்பூசி பட்டியலில் இணையும் சீனாவின் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.

கடந்த மாதம் சீனாவின் முதலாவது கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது.

சீனாவின் ‘சினோவாக்’ தடுப்பூசி செயல்திறன் மற்றும் உற்பத்திக்கான சர்வதேச தரங்களை பூர்த்தி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தரவாதத்தை அளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை பெய்ஜிங்கை தளமாகக் கொண்டு இயங்கும் சினோவாக் நிறுவனம் தயாரிக்கிறது.

இரண்டு முதல் நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ‘சினோவாக்’ தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக ‘சினோவாக்’  தடுப்பூசியின் செயல்திறன் 51% என ஆய்வுகளில் கணிப்பிடப்பட்டுள்ளன.

‘சினோவாக்’ தடுப்பூசியானது கொரோனா தொற்றின் பாதிப்பை தடுப்பதுடன், தொற்றுக்குள்ளானவரை கடுமையான நோய்நிலமையில் இருந்து 100% பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘சினோவாக்’ தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிட முடியவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.