October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள சீனா அனுமதி!

தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளமை புள்ளி விபரங்களின் ஊடாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல தசாப்த காலமாக தம்பதிகளுக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை கடைபிடித்து வந்த சீனா, 2016 ஆம் ஆண்டில் அதனை மாற்றி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது.

எனினும், எதிர்பார்த்த பிறப்பு விகிதத்தை அடையவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதற்கு சீன ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், சீன தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தீர்மானம் நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பை மேம்படுத்தி, மனித வளங்களை பராமரிப்பதற்கு உதவுவதாக அமையும் என்று சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.