April 29, 2025 13:26:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டாசன்’ நடிகர் ஜோ லாரா உள்ளிட்ட 7 பேர் விமான விபத்தில் பலி!

உலகப் புகழ்பெற்ற ‘டாசன்’ திரைப்பட நடிகர் ஜோ லாரா உள்ளிட்ட 7 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நெஷவில் நகரை அண்மித்த பகுதியில் இவர்கள் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களிடையே நடிகர் ஜோ லாராவும் அவரின் மனைவியும் அடங்குவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், புறப்பட்டு சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.