ஜூன் முதலாம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மலேசியா முற்றாக முடக்கப்படவுள்ளது.
மலேசியாவில் பரவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி ஜூன் முதலாம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் பட்டியலிடப்படும் அத்தியாவசியப் பொருளாதார மற்றும் சேவைத் துறைகளைத் தவிர மற்றைய அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இதுவரையில் 5 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தொற்று தாக்கத்தால் 2,500 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.