ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள நயிரா எரிமலையை அன்மித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எரிமலை எந்த நேரத்திலும் பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் நயிரா எரிமலை வெடித்து சிதறியதால் அதில் இருந்து வெளியேறிய லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 32 பேர் பலியாகியதுடன், குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் அந்த எரிமலை பகுதியில் நேற்று நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்று கூறப்படுகின்றது.
இதனால் எரிமலையை அண்மித்துள்ள நகர மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி கொங்கோ அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அவர்களை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதேவேளை பலர் அருகில் உள்ள ருவாண்டா நாட்டுக்கு செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.