நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 150 க்கு அதிகமான பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
நைஜர் ஆற்றில் பயணிகளை சந்தைக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
படகின் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதால் படகு ஆற்றில் மூழ்கியுள்ளதாக நைஜீரிய உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
180 பேர் படகில் பயணித்துள்ளதாகவும் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நால்வர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 156 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், ஏனையோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி அனுதாபம் வெளியிட்டுள்ளார்.