image : twitter /Vigili del Fuoco
இத்தாலியின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மாகியோர் ஏரி அருகே கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 5 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் ஹெலிகொப்டர் மூலம் டுரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கேபிள் கார் விபத்துக்குள்ளானபோது விமானத்தில் இருந்த 15 பயணிகளில் இரு சிறுவர்கள் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
மாகியோர் ஏரிக்கு அருகிலுள்ள காடுகளில் கேபிள் காரின் உடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் உள்ளூர் அறிக்கைகளின்படி மலையின் உச்சியில் இருந்து சுமார் 300 மீ (984 அடி) உயரத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கேபிள் கார் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1,400 மீட்டர் உயரத்தில் உள்ள மாகியோர் ஏரியின் ஸ்ட்ரெஸா நகரத்திலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தின் அருகிலுள்ள மொட்டரோன் மலையின் உச்சிக்கு சுற்றுலாப் பயணிகளினதும் உள்ளூர் மக்களினதும் போக்குவரத்துக்காக பயன்படுகின்றது.