சீனாவின் தென் மேற்கு யுன்னான் மாநிலம் மற்றும் வட மேற்கு கிங்காங் மாநிலம் ஆகியவற்றில் பலமான தொடர் புவியதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
2 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள இரு மாநிலங்களிலேயே இவ்வாறு புவியதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
யுன்னான் மாநிலத்தில் நேற்று இரவு 5.0 பரிமாண புதியதிர்வும் கிங்காங் மாநிலத்தில் இன்று காலை 7.4 பரிமாண புவியதிர்வும் பதிவாகியுள்ளதாக சீன புவியதிர்வு வலையமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 380 இடைத்தங்கல் முகாம்களில் அவர்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 ஆயிரத்துக்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.