February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜீரிய இராணுவத் தளபதி உட்பட 11 அதிகாரிகள் விமான விபத்தில் பலி!

நைஜீரிய இராணுவத் தளபதி லுதினண்ட் ஜெனரல் இப்றாஹிம் அத்தாஹிரு விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா மாநிலத்தில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையில் விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் இராணுவத் தளபதியுடன் மேலும் 10 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி கவலை தெரிவித்துள்ளார்.

54 வயதுடைய இப்றாஹிம் அத்தாஹிரு ஜனவரி மாதம் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.