October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்- பலஸ்தீன் போர் நிறுத்தத்துக்கு வர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் வன்முறைகளில் இருந்து போர் நிறுத்தத்துக்கு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடைடே அமைதியின்மை ஏற்பட்டு 8 நாட்களின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா, எகிப்து மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐநா பாதுகாப்பு சபையின் போர் நிறுத்த அறிக்கையை மீண்டும் ஒரு தடவை அமெரிக்கா தடுத்துள்ளது.

காஸாவில் இருந்து தமக்கு நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தாம் பதில் வான்வழி தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையிலான மோதலில் பலஸ்தீனில் 212 சிவிலியன்களும் இஸ்ரேலில் 10 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பலஸ்தீனில் கொல்லப்பட்டவர்களில் 150 க்கு அதிகமானவர்கள் ஆயுததாரிகள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அப்பாவி பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.