November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்படுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

பலஸ்தீனின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அமைதியின்மை இரண்டாவது வாரமாகவும் தொடர்கின்றது.

ஹமாஸ் அமைப்பின் பதுங்கு குழிகள் மற்றும் ஹமாஸ் கட்டளைத் தளபதிகள் உள்ள இலக்குகளை நோக்கி தாம் கடுமையான தாக்குதலை முன்னெடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவர்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த யுத்த நிலைமையில் 200 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 58 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ், இஸ்ரேலின் தெற்கு பகுதிகளுக்கு தொடர்ந்தும் ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

அமெரிக்கா, எகிப்து உட்பட பல்வேறு நாடுகளும் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இஸ்ரேல்- பலஸ்தீன மோதல்கள் தொடர்கின்றன.