January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்- பலஸ்தீன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதி வருகை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதி ஹாதி அம்ர் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவுக்கு வருகை தந்துள்ளார்.

இஸ்ரேல்- பஸ்தீனுக்கு இடையே ஒரு வாரத்துக்கும் அதிகமான காலமாக அமைதியின்மை தொடர்கின்றதை அடுத்தே, அமெரிக்கா சமாதான பேச்சுக்களை நடத்த முன்வந்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதி ஹாதி அம்ர், இஸ்ரேல்- பலஸ்தீன மற்றும் ஐநா அதிகாரிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை இஸ்ரேலிய படையினர் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், பலஸ்தீனின் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியின்மையைத் தொடர்ந்து, 133 பலஸ்தீனியர்களும் 8 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே, அமெரிக்க பிரதிநிதியின் இஸ்ரேஸ் விஜயம் அமைந்துள்ளது.

இஸ்ரேல்- பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலையான அமைதியை ஏற்படுத்துவதே ஹாதி அம்ரின் விஜயத்தின் நோக்கமென இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.