January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் ஸுஹுரோங் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது’

சீனாவின் ஸுஹுரோங் விண்கலம் வெற்றிகரமான செவ்வாயில் தரையிறங்கியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆறு சக்கரங்களைக் கொண்ட ஸுஹுரோங் ரோபோ, செவ்வாயில் வடக்கு அரைக்கோளத்தின் உட்டோபியா பிளானிட்டியா நிலப்பரப்பில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸுஹுரோங் விண்கலம் பெரசூட் ஒன்றின் உதவியுடன் செவ்வாயில் தரையிறங்கியதோடு, அது தமது பெரும் வெற்றியாகும் என்று சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அக்கினியின் கடவுள் எனப் பொருட்படும் ஸுஹுரோங் விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் சந்திரனுக்கான பயணத்தை ஆரம்பித்தது.

ஸுஹுரோங் ரோபோ செவ்வாயின் நிலத் தோற்றம் மற்றும் அமைப்புகள் தொடர்பாக உயர் புகைப்படங்களை எடுக்கவுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

உலகில் இருந்து செவ்வாய்க்கான தூரம் 320 மில்லியன் கிலோ மீட்டர்கள் என்பதோடு, அங்கிருந்து அனுப்பும் ரேடியோ செய்திகள் புவிக்கு வருவதற்கு 18 நிமிடங்கள் எடுப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டியான்வென் குழு இந்த விண்வெளி முயற்சியை முன்னெடுத்துள்ளது.