July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் அவசியமில்லை’

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் முகக்கவசம் அணியாது வெளியிடங்களுக்கு செல்லலாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டமாக இருக்கும் பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவீத்துள்ளனர்.

இந்த கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டப்பின் ஜனாதிபதி ஜோ பைடன் தனது அலவலுகத்தில் முகக்கவசத்தை அகற்றினார்.

அத்துடன் இது பற்றி மகிழ்ச்சியை அறிவிக்கும் நிகழ்வுக்கு அவர் முகக்கவசம் இல்லாமலே சென்றார்.

”இந்த நாளை அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு தினம்” என்று ஜனாதிபதி ஜோ பைடன் அந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரையும் கைது செய்யப்போவதில்லை” என்று தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”விதிகள் மிக எளிமையானது. தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.