January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமாத்திரா தீவுக்கு அருகில் நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

Earth Quake common Images

இந்து சமுத்திரத்தின் சுமாத்திரா தீவுக்கு அருகில் இன்று பகல் நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

ரிச்டர் அளவில் 6.7 ஆக அந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகல் 12.03 மணியளவில் வடக்கு சுமாத்திரா தீவுக்கு மேற்கே கடல் பகுதியில் 6.7 கிலோ மீறிறர் ஆழத்தில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கைக்கு சுனாமி அபாயம் எதுவும் கிடையாது என்றும், கரையோர மக்கள் அச்சமடையத் தேவைவயில்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.