ரஷ்யாவின் கஸான் மாநில பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
பாடசாலையினுள் இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 9 பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு மேற்கொண்ட சந்தேகத்தில் ஒரு இளைஞன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னொருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் பாடசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 மாணவர்கள் உட்பட 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.