
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் 4 வயது சிறுமியொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
டைம்ஸ் சதுக்க பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே அந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது அதில் சிக்கி சிறுமியும், மேலும் 3 பெண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது நியூயோர்க் நகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.