(Photo : twittter/Mian abdul raziq)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சயீத் உல்-சுஹாதா மேல்நிலைப் பாடசாலைக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மாணவர்கள் பாடசாலை கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது, இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் பல பாடசாலை பைகள் சிதறுண்டு இருப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் காட்சிகள் காட்டுகின்றன.
சையத் உல்-ஷுஹாதா பாடசாலையில் காலையில் ஆண் மாணவர்களுக்கும் பிற்பகல் பெண் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குறித்த பாடசாலையின் மாணவிகள் என அந்நாட்டு கல்வி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.