January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய மாணவர்கள் இரண்டு மாதங்களின் பின்னர் விடுதலை

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் இரண்டு மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அழுகையுடனும் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டும் நேற்று பெற்றோரிடம் திரும்பியுள்ளனர்.

வட மேற்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தின் வனவியல் கல்லூரி ஒன்றில் இருந்த மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டனர்.

ஆரம்பமாக 10 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்ததோடு, இருவர் தப்பி வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று எஞ்சியிருந்த 27 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாம் காட்டுப் பகுதியொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தடி மற்றும் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்புத் தொகையைக் கேட்பதற்காக மாத்திரமே பெற்றோருடன் கதைக்க அனுமதிக்கப்பட்டதாகவும் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மீட்புத் தொகை வழங்கிய பின்னரே மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும், கடத்தலை மேற்கொண்ட அமைப்பின் பெயரோ, விடுதலைக்காக வழங்கப்பட்ட தொகையோ இதுவரையில் வெளியிடப்படவில்லை.