சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை தாம் அவசர பாவனைக்காக அனுமதித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
மேற்கு நாடுகள் தவிர்ந்த நாடொன்று தயாரித்த கொவிட் தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சீனாவின் சினோபார்ம் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசி இதுவரையில் சீனா மற்றும் வெளிநாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது.
எந்தவொரு தொற்று நோய்க்கும் சீனா கண்டுபிடித்த தடுப்பு மருந்துகளில் உலக சுகாதார ஸ்தானம் அங்கீகரித்த முதல் தடுப்பூசியும் இதுவாகும்.
பைசர், அஸ்ட்ரா செனிகா, ஜோன்சன் என்ட் ஜோன்சன் போன்ற தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பயன்பாட்டிற்கு அனுமதித்திருந்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் மெடோர்னா தடுப்பூசியையும் அனுமதித்தவை குறிப்பிடத்தக்கது.